VIP Feedback
-
-Kavitha Javakar
" ஆழியாறு அறிவுத்திருக்
கோயிலானது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருளாசியோடு, அடுத்த தலைமுறைமேல் அக்கறையோடும், உலக சமுதாய மேம்பாட்டுக்காகவும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது.நம் சித்தர்கள் விட்டுச் சென்றதை மகரிஷியின் அருளோடு கற்றுத் தருகிற ஆசிரியர்கள், நிர்வாகத்தை சேர்ந்த அன்புப் பெருமக்கள் அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். " -
-Haho Sirippananda Sampath
" வாழ்க வளமுடன்!
வளர்க சிரிப்புடன்!மதிப்பும் அன்பும் மிக்கவர்களே!
அறிவுத்திருக்கோவில் அற்புத புண்ணியஸ்தலம். மெய் சிலிர்க்க வைக்கும் பேராற்றல் ஒவ்வொரு பகுதியிலும் நிறைந்திருப்பதை எளிதில் உணரமுடிகிறது.
வந்தேன் வருகிறேன் வருவேன்!
அன்பு, அமைதி, கட்டுப்பாடு, சுதந்திரம் எல்லாமே ஒவ்வொரு மனிதனையும் தலைகீழ் மாற்றமடைய வைக்கும்!
உள்ளே வந்தவர்கள் பாக்கியவான்கள்!
வாழ்க வளமுடன்! " -
-Smt. Desamangaiyarkarasi
" அறிவுத் திருக்கோயிலில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆத்மா புதிய தேடலில் மகிழ்கிறது.திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி, தேச. மங்கையர்க்கரசி "
-
-Dr. RameshPrabha
" மனித குலத்துக்குத் தேவையான அறிவூட்டலை சாதி, மதம் கடந்து சேவையாக செய்து வரும் ஆழியாறு அறிவுத்திருக்கோவிலின் பணி பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்கும் உரியது. அதில் எனக்கும் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி, நன்றி "