I would like to support Village Service Project

VSP at KOLATHUR Village

Started on July 9, 2017 Sponsored by WCSC, Located in Trichy zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  கொளத்தூர்
மாவட்டம்                             - திருச்சி
கிராம மக்கள் தொகை                -   
பயிற்சியால் பலனடைந்தவா்கள்      -  

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய   சேவைத் திட்டத்தின் 98வது   கிராமமாக திருச்சி மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில் 09-07-2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் WCSC திருச்சி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி. சௌ. சந்திரசேகரன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். அருள்நிதி மாலா ஜெயப்ரகாஷ் அவா்கள், மண்டல தலைவர், திருச்சி மண்டலம். திரு.மு.சந்திரசேகரன் அவா்கள், திருமதி.கலைச்செல்வி முருகராஜ் அவா்கள், ஸ்கை யோகா சென்டர் , துபாய். WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம், திருமதி அகல்யா கண்ணுசாமி VSP துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். திருமதி வே.சாந்தா, இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியர் , பெரம்பலூர் அவா்கள் தலைமையுரையாற்றினார். உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அருள்நிதி  S.காளிதாசன், செயலாளர்,WCSC – திருச்சி மண்டலம் அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள்,Dr.R. புவனேஸ்வரி தேவராஜன் M.B.B.S,D.O.M.S.M.sc(YHE).,  Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமை கலைக் காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத் திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.