I would like to support Village Service Project

VSP at KURUMBAGARAM Village

Started on June 24, 2017 Sponsored by WCSC, Located in Kumbakonam zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  குரும்பகரம்  
மாவட்டம்                              - புதுச்சேரி
கிராம மக்கள் தொகை                -   
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   96 வது கிராமமாக புதுச்சேரி,  காரைக்கால் மாவட்டம் குரும்பகரம்  கிராமத்தில் 24.06.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில், துவக்கமாக  காரைக்கால் மனவளக்கலை மன்ற  அறக்கட்டளை துணைத் தலைவர்(VSP) பேரா. A. கோதண்டராமன் அவா்கள் இறைவணக்கம், குருவணக்கம் பாடி தவத்தை நடத்தினார். காரைக்கால் மனவளக்கலை மன்ற  அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேரா.S. வேலு அவர்கள் வரவேற்புரையாற்றினார். நெடுங்காடு கொம்யுன் பஞ்சாயத்து ஆணையர் திரு.க.காளிதாஸ் (எ) காமாட்சிசுந்தரம் அவர்கள், WCSC கும்பகோணம் மண்டலத் தலைவர் அருள்நிதி.V.பெரியசாமி அவர்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் அவர்கள், மற்றும் குரும்பகரம் (திட்ட நன்கொடையாளர்)  அருள்நிதி.P.ஸ்ரீதா்M.E, (Camp Bahrain) அவர்கள், குடும்பத்தினா் ஆகியோர் முன்னிலை வகித்தனா். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப.பார்த்திபன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையுரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். புதுச்சேரி அரசு  நெடுங்காடு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினா்  திருமதி.சந்திரபிரியங்கா அவா்கள் வாழ்த்துரை வழங்கினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் துணைத்தலைவர்(VSP) அருள்நிதி.S. முத்து அவா்கள்  நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள்,  திருநள்ளார் CHC Medical Officer Dr. சிவராஜ்குமார் M.B.B.S.,DCH., அவா்கள், Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.