I would like to support Village Service Project

VSP at KONDAPANAYAKANPALAYAM Village

Started on April 19, 2017 Sponsored by WCSC, Located in Erode zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -   கொண்டப்பநாயக்கன்பாளையம்
மாவட்டம்                              -  ஈரோடு               
கிராம மக்கள் தொகை                -   1100
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 91 வது கிராமமாக ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா  காரணைப்புதூர் கிராமத்தில் 19.04.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
     இவ்விழாவில் WCSC ஈரோடு மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.R.சுந்தரம் அவா்கள் வரவேற்புரையாற்றினார்.. WCSC விரிவாக்க இயக்குனா்-செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், ஈரோடு மண்டலத் துணைத்தலைவர் (VSP) பேரா.M.R. ஸ்ரீநிவாசன் அவர்கள், ஈரோடு மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணைத் தலைவர் (VSP)  அருள்நிதி.V.P. ஜெகதீசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ஆழியார் அறிவுத்திருக்கோயில்  தலைவர், பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் Dr.S.V. பாலசுப்ரமணியம் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் Dr.S. பிராபகர் IAS., அவா்கள் தலைமையுரையாற்றினார். Dr.M.P. விஜயகுமார் IAS., (Retd.) அவா்கள் வாழ்த்துரை வழங்கினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC ஈரோடு மண்டலத்தின் செயலாளா் பேராசிரியா்.V.M.வெங்கடாச்சலம் அவா்கள்  நன்றியுரை வழங்கினார்.   WCSC-R&D இயக்குனர் Dr.M.V.ரபீந்திரநாத் B.Sc.,M.D., அவா்கள், திருப்பூா்  அரசு மருத்துவமனை  குழந்தை மனோதத்துவ நிபுணர் Dr.R. கார்த்திகேயன் M.Sc.,M.Sc.,M.Sc.,Ph.D. அவா்கள், Tirunelveli, Govt of Tamilnadu, Department of Agriculture, Former Joint Director of Agriculture திரு.C.சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
    இறுதியில் திருச்சி அருமைக் கலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.