I would like to support Village Service Project

VSP at MANGALAM Village

Started on March 19, 2017 Sponsored by WCSC, Located in Pondy zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  மங்கலம் 
மாவட்டம்                              - புதுச்சேரி       

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   87 வது கிராமமாக புதுச்சேரி, வில்லியனூர்மங்கலம் கிராமத்தில் 19.03.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
       இவ்விழாவில் பாண்டிச்சேரி வில்லியனூர்  மனவளக்கலை மன்ற  அறக்கட்டளை நிர்வாக அறங்காவலா் அருள்நிதி.R.திருநாவுக்கரசு அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். WCSC பாண்டிச்சேரி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.V. ஜானகிராமன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். மங்கலம் தொகுதி திரு.S.V.சுகுமாறன் MLA  அவர்கள், Bahrain திரு.S.இளமுருகுசேகர் அவா்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் அவர்கள், WCSC பாண்டிச்சேரி மண்டலம் ,துணைத்தலைவா் (VSP) அருள்நிதி.P.மணிபாலன் அவர்கள் மற்றும் பாண்டிச்சேரி வில்லியனூர்  மனவளக்கலை மன்ற  அறக்கட்டளைத் துணைத் தலைவர் (VSP) அருள்நிதி.T.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.  புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.P.T. ருத்ரகவுடு அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC பாண்டிச்சேரி மண்டலத்தின் செயலாளர் அருள்நிதி.S. முருகையன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள், Dr.S.சீனுவாசன் M.B.B.S.,DNB (Apollo) அவா்கள், Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
     இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

       உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 82 வது கிராமமாக திருச்சி மண்டலம்   மங்கலம் கிராமத்தில் 15.09.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC – மண்டலத்தலைவா்,  பாண்டிச்சேரி வில்லியனூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.பேரா. R. திருநாவுக்கரசு அவா்கள் வரவேற்புரையாற்றினார். ,பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். ஒருங்கினைப்பாளா், WCSC – VSP பேரா. G.பாலமுருகன் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். தலைவா், WCSC- புதுச்சேரிமண்டலம் அருள்நிதி. V. ஜானகிராமன் அவா்கள்.அவா்கள் முன்னிலையுரையாற்றினார். முன்னால் துணைத்தலைவா், வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து. திரு. க. சங்கா் @ ராதாகிருஷ்ணன் அவா்கள்.  திரு.S. ராமகிருஷ்ணன்  அவா்கள்,தலைவா். மங்கலம் கிராம பஞசாயத்து.அருள்நிதி. T. சந்தானகிருஷ்ணன் அவா்கள், துணைத்தலைவா் (VSP) பாண்டிச்சேரி வில்லியனூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. ஆகியோர்   முன்னிலை வகித்தனா். இயக்குனா், WCSC-VSP அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள்,திட்ட நிறைவுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார். பொருளாளா், WCSC – புதுச்சேரி மண்டலம். அருள்நிதி. சௌந்தரராஜன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது.