I would like to support Village Service Project

VSP at SIRUKUDAL Village

Started on February 7, 2017 Sponsored by WCSC, Located in Trichy zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  சிறுகுடல்
மாவட்டம்                              -   திருச்சி             

 துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின்  78 வது கிராமமாக திருச்சி  மாவட்டம் சிறுகுடல்  கிராமத்தில் 06.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
       இவ்விழாவில்  பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் அருள்நிதி சௌ.சந்திரசேகர் அவா்கள் வரவேற்புரையாற்றினார். . WCSC விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.V.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். திருச்சி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.மாலா ஜெயப்பிராகாஷ் முன்னிலையுரையாற்றினார். விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் முன்னிலை வகித்தார்.   பெரம்பலூர் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலர் செல்வி.இரா.பேபி அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திருச்சி  மண்டலத்தின் செயலாளா் அருள்நிதி.S.காளிதாசன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். திருச்சி மண்டலத் துணைத் தலைவர் (VSP) Dr.R.புவனேஷ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
   இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

        உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 77 வது கிராமமாக திருச்சி மண்டலம்   சிறுகுடல் கிராமத்தில் 19.08.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் WCSC – மண்டலத்தலைவா், திருச்சி மண்டலம்  அருள்நிதி. மாலா ஜெயபிரகாஷ் அவா்கள்,விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். பெரம்பலுார் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. அருள்நிதி . சௌ. சந்திரசேகரன் அவா்கள்.முன்னிலையுரையாற்றினார். தாசில்தார், வருவாய்துரை, பெரம்பலுார். திருமதி. R. நுார்ஜகான் அவா்கள். தலைமையுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார். இயக்குனா்,- செயலா், WCSC- விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள்,திட்ட நிறைவுரையாற்றினார். VSP துணைத்தலைவா், திருச்சி மண்டலம். அருள்நிதி Dr. புவனேஸ்வரி அவா்கள்  நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது.