I would like to support Village Service Project

VSP at VENKATRAYANPETTAI Village

Started on January 25, 2017 Sponsored by WCSC, Located in Chennai Sub-Urban zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  வெங்கட்ராயன்பேட்டை
மாவட்டம்                              - காஞ்சிபுரம் 
கிராம மக்கள் தொகை                -  540 

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   76 வது கிராமமாக சென்னை புறநகா்  மண்டலம் வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் 22.01.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் காஞ்சிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அருள்நிதி.K.M.தாமோதரன் M.E.,M.Sc.,(YHE) அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட அறமுகவுரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின் தலைவா் சோ.மயில்முருகன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். ஆலந்தூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேரா.M.தேன்மொழி அவர்கள், வெங்கட்ராயன்பேட்டை அருள்நிதி.S. நந்தகுமார் அவர்கள் மற்றும் WCSC சென்னை புறநகா்  மண்டலம் ,துணைத்தலைவா்(Extn&VSP) பேரா.B.K.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் பல்லவன், காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா  ராணிப்பேட்டை  ஜெய் மாதாஜி, கல்வி குழுமங்களின்  நிறுவனர் மற்றும் தலைவர் திரு.B.போஸ் அவா்கள், தலைமையுரையாற்றினார். வெம்பாக்கம் வட்டாசியா்  திரு. . பெருமாள் B.A., அவா்கள் மற்றும் வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராமிய ஊராட்சி) திரு.K.ரங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின்  செயலாளர்  து.பேரா.K.சம்பத்குமார் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். வெம்பாக்கம் Chief Medical officer, Primary Health Center  Dr.A.ஏழுமலை M.B.B.S.,M.S., அவர்கள் மற்றும்காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி திரு. R.ஜெயமணி M.Sc.,M.Phil., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
     இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

 

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 73 வது கிராமமாக  சென்னை புறநகர் மண்டலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் 28.07.2017 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது. 
         இவ்விழாவில் காஞ்சிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை து.பேரா K.M. தாமோதரன்,M.E.M.Sc.,(YHE) அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.WCSC- சென்னை புறநகர் மண்டலத்தின் தலைவா் பேரா.S.மயில்முருகன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். திரு.B.மணிகண்டன், திருமதி. கற்பகம் ஜெயபால் அவர்கள், வார்டு உறுப்பினர்கள், திருமதி. முல்லைக்கொடி சசி முன்னாள் பஞ்சாயத்துத்தலைவர், துணைத்தலைவர்(VSP) சென்னை புறநகர் மண்டலம் பேரா.B.K.கண்ணப்பன் ஆகியோர்   முன்னிலை வகித்தனா். வட்டார வளர்ச்சி அலுவலர், வெம்பாக்கம்.  திரு.D. சுந்தரம் M.A., அவர்கள் தலைமையுரையாற்றினார்.  உதவி கல்வி அலுவலர் , வெம்பாக்கம் அருள்நிதி.B.ஜோதி.M.A.,M.Ed.,M.Phil.,M.A.,(YHE)  அவர்கள்  வாழ்த்துரையாற்றினார். WCSC விரிவாக்கம், ஆழியாறு இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட நிறைவுரையாற்றினார். செயலாளர், சென்னை புறநகர் மண்டலம், து. பேரா.K.சம்பத்குமார் அவா்கள் நன்றியுரையாற்றினார். இறுதியாக ஒளி, ஒலி படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.