I would like to support Village Service Project

VSP at PARIVAKKAM Village

Started on January 25, 2017 Sponsored by WCSC, Located in Chennai zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  பாரிவாக்கம்
மாவட்டம்                              -   திருவள்ளூர் 
கிராம மக்கள் தொகை                -  500
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   75 வது கிராமமாக சென்னை நகா்  மண்டலம் பாரிவாக்கம் கிராமத்தில் 21.01.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
    இவ்விழாவில் பூந்தமல்லி H.P.S. .வ.க. மன்றம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்  அருள்நிதி. D.இளங்கோ அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டஅறிமுகவுரையாற்றினார். சென்னை நகர் மண்டல தலைவர் அருள்நிதி.V.C.சுந்தரம் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். தனி அலுவலர்  திரு.V.ரவி அவர்கள் முன்னாள்  ஊராட்சி மன்றத் தலைவா் திரு.V. தணிகாசலம் அவா்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திரு. G.வைத்தியநாதன் அவா்கள், திரு.M.மணி அவா்கள், சென்னை நகா்  மண்டலம் துணைத்தலைவர்(VSP) அருள்நிதி.S.குமாரவேல் மற்றும் பூந்தமல்லி H.P.S.  .வ.க. மன்றம் அறக்கட்டளைத் துணைத்தலைவர்(VSP)  அருள்நிதி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நடுவர் திருமதி..சுந்தரவல்லி ... அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC சென்னை நகா்  மண்டலச் செயலாளர்  அருள்நிதி.D.விஜயராமகிருஷ்ணா  அவா்கள்  நன்றியுரை வழங்கினார். சென்னை Dr.R.இரங்கராஜன் M.D.  அவர்கள் மற்றும் சென்னை அருள்நிதி.Dr.G.சாந்தினி B.H.M.S.,M.A.(Yoga),M.Sc.(Psy) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
    இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 74 வது கிராமமாக  சென்னை நகர மண்டலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பாரிவாக்கம் கிராமத்தில் 30.07.2017 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது. 
         இவ்விழாவில் நிர்வாக அறங்காவலர், பூந்தமல்லி H.P.S மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை பேரா D.இளங்கோ அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். WCSC-சென்னை நகர மண்டலம் பேரா.V.C.சுந்தரம் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். வட்டாச்சியர் வட்ட நிர்வாக நடுவர்,பூந்தமல்லி திரு.A.லக்ஷ்மணன்  அவர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், பாரிவாக்கம்  திரு.V. தணிகாசலம் அவர்கள், மேலாண்மை அறங்காவலர் மேண்டார்ஸ் தொண்டு நிறுவனம் திரு. S.வானுமாமலை அவர்கள் பாரிவாக்கம் சாரிடபுள் டிரஸ்ட் திரு. M.மணி அவர்கள், துணைத்தலைவர்(VSP) சென்னை நகர் மண்டலம் பேரா. S. குமாரவேல் அவர்கள், துணைத்தலைவர்(VSP), பூந்தமல்லி H.P.S. மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை பேரா.K.S.ராஜேஸ்வரி ஆகியோர்   முன்னிலை வகித்தனா். வருவாய் கோட்டாட்சியர் , உட்கோட்ட நிர்வாக நடுவர் , திருவள்ளுவர் கெ.ரா.திவ்யஸ்ரீ அவர்கள் தலைமையுரையாற்றினார். இயக்குனர்(வளர்ச்சி), விஷன்.முதுநிலை பேரா.Dr.K.பெருமாள் அவர்கள்  வாழ்த்துரையாற்றினார். பொதுச்செயலாளர் , உலக சமுதாய சேவா சங்கம்.  முதுநிலை பேரா R.வரதராஜன் அவர்கள்  சிறப்புறையாற்றினார். WCSC விரிவாக்கம், ஆழியாறு இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட நிறைவுரையாற்றினார்.செயலாளர் சென்னை நகர் மண்டலம் பேரா விஜயராமகிருஷ்ணா அவா்கள் நன்றியுரையாற்றினார்.இறுதியாக ஒளி, ஒலி படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.