I would like to support Village Service Project

VSP at KOTHANGUDI Village

Started on January 7, 2017 Sponsored by WCSC, Located in Kumbakonam zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  கொத்தங்குடி
மாவட்டம்                              -   நாகப்பட்டினம்             
கிராம மக்கள் தொகை                -  312
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 74 வது கிராமமாக  கும்பகோணம் மண்டலம் நாகப்பட்டிணம்  மாவட்டத்தில் கொத்தங்குடி  கிராமத்தில் 07.01.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
      இவ்விழாவினை மன்னார்குடி மேலவீதி மனவளக்கலை மன்றத்தின் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி. லதா மகேஸ்வரி காமராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அருள்நிதி. SATS.சுதந்திரமணி  அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.V.பெரியசாமி   அவர்கள், கொத்தங்குடி, மேனால் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மகா.இரவி  அவர்கள், கொத்தங்குடி  பெருநிலக்கிழார்  திரு.A.S.கணேசன் அவர்கள், திருத்துறைப்பூண்டி MVK நிறுவன உரிமையாளர், வர்த்தக சங்கத்தலைவர் லயன். K.S.செந்தில்குமார் B.A.,அவர்கள், திருத்துறைப்பூண்டி MVK நிறுவன உரிமையாளர் திரு. MVK.P. பிரவீன்குமார்B.B.A.,அவர்கள் மற்றும் மன்னார்குடி  மனவளக்கலை மன்றத்தின் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி.R.கைலாசம் (நன்கொடையாளர்)  ஆகியோர்   முன்னிலை வகித்தனா். நாகப்பட்டினம் திருக்குவளை தாலுகா  வட்டாட்சியர் திருமதி.V.சுதாராணிB.Com.,M.B.A., அவர்கள் தலைமையுரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட அறிமுகவுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் செயலாளா் அருள்நிதி.R.K.இராதாகிருஷ்ணன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா். ஆழியாறு விஷன் இயக்குநர்(நிர்வாகம்) பேராசிரியர்.V. இராமமூர்த்தி அவர்கள், விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் (VSP)பேரா.K.R.சண்முகம் அவா்கள், திருத்துறைப்பூண்டி ARV நிறுவன உரிமையாளர் திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயல் தலைவர் பி.ஞா.A.R.V. வடிவேல் தேவர் அவர்கள், கும்பகோணம் மண்டலத்தின் துணைத் தலைவா்(VSP) அருள்நிதி.S.முத்து அவா்கள், திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணைத் தலைவர்(VSP). பேரா.T.தில்லையம்மாள் அவர்கள், Skin Specialist Dr.N.விஜயகுமார்M.D. அவர்கள் மற்றும் அருள்நிதி. சுசீலாமூர்த்தி M.A.,M.Phil.,M.A.(Yoga) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
   இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

 

நிறைவு விழா

         உலக சமுதாய சேவா சங்கம்கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   71 வது கிராமமாக கும்பகோணம் மண்டலம் நாகப்பட்டினம் மாவட்டம் கொத்தங்குடி கிராமத்தில் 25.06.2017 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
         இவ்விழாவில் திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அருள்நிதி. SATS.சுதந்திரமணி  அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.V.பெரியசாமி  அவா்கள் முன்னிலையுரையாற்றினார். கொத்தங்குடி, மேனால் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மகா.இரவி  அவர்கள், கொத்தங்குடி  பெருநிலக்கிழார்  திரு.A.S.கணேசன் அவர்கள் மற்றும் WCSC கும்பகோணம் மண்டலத்தின் துணைத் தலைவா் அருள்நிதி.R.கைலாசம்   ஆகியோர்   முன்னிலை வகித்தனா். நாகப்பட்டினம் திருக்குவளை தாலுகா  வட்டாட்சியர் திருமதி.V.சுதாராணிB.Com.,M.B.A., அவர்கள் தலைமையுரையாற்றினார். WCSC விரிவாக்க இயக்குனரகம்- இயக்குனர்  மு.பேரா.உழவன் மா.தங்கவேலு அவர்கள்  சிறப்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், ஆழியாறு இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட நிறைவுரையாற்றினார். கும்பகோணம் மண்டலத்தின் துணைத் தலைவா்(VSP) அருள்நிதி.S.முத்து அவா்கள் நன்றியுரையாற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக திருத்துறைப்பூண்டி ARV நிறுவன உரிமையாளர் திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயல் தலைவர் பி.ஞா.A.R.V. வடிவேல் தேவர் அவர்கள், திருத்துறைப்பூண்டி MVK நிறுவன உரிமையாளர், வர்த்தக சங்கத்தலைவர் லயன். K.S.செந்தில்குமார் B.A.,அவர்கள், திருத்துறைப்பூண்டி MVK நிறுவன உரிமையாளர் திரு. MVK.P. பிரவீன்குமார்B.B.A., ஆகியோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக ஒளி, ஒலி படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.