I would like to support Village Service Project

VSP at KEELKARIKATHUR Village

Started on December 27, 2016 Sponsored by WCSC, Located in Thiruvannamalai zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  கீழ்கரிகாத்தூர்
மாவட்டம்                             -  திருவண்ணாமலை                 
கிராம மக்கள் தொகை               -  349
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     - 

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின்  73 வது   கிராமமாக    திருவண்ணாமலை      மாவட்டம்     கீழ்கரிகாத்தூர் கிராமத்தில் 20.12.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில்  களம்பூா் அறக்கட்டளைத் தலைவா் அருள்நிதி. V.முரளி அவா்கள் வரவேற்புரையாற்றினார்.  WCSC விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். திருவண்ணாமலை மண்டலத்தின் தலைவா் அருள்நிதி. S.சந்திரசேகரன் அவா்கள்  முன்னிலையுரையாற்றினார். திருவண்ணாமலை மண்டலத்தின் துணைத்தலைவா் (VSP)அருள்நிதி.K. பிச்சாண்டி அவா்கள், களம்பூா் அறக்கட்டளைத் துணைத்தலைவா்(VSP) அருள்நிதி.G. தினகரன் ஆகியோர்   முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட   ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு. .சூரியகுமார் அவா்கள் தலைமையுரையாற்றினார். போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  திரு. K.V.சேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC  திருவண்ணாமலை மண்டலப்   பொருளாளா் அருள்நிதி.S.ரவிச்சந்திரன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். வடமாதிமங்கலம் அரசு மருத்துவர்  Dr.K.மணிகண்டபிரபு M.B.B.S., அவர்கள், அருள்நிதி. சுசீலாமூர்த்தி M.A.,M.Phil.,M.A.(Yoga) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 72 வது கிராமமாக  திருவண்ணாமலை மண்டலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்கரிகாத்தூர் கிராமத்தில் 27.07.2017 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
         இவ்விழாவில் களம்பூர் மன்ற அறக்கட்டளை அறிவுத்திருக்கோயில் தலைவர் மற்றும் திருவண்ணாமலை மண்டலச் செயலாளர் அருள்நிதி. V. முரளி அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.WCSC- திருவண்ணாமலை மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.S.சந்திரசேகரன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். அருள்நிதி.K.பிச்சாண்டி, துணைத்தலைவர் (VSP), திருவண்ணாமலை மண்டலம் அவர்கள், அருள்நிதி.K.L.G. தினகரன் துணைத்தலைவர் (VSP), களம்பூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ஆகியோர்   முன்னிலை வகித்தனா். திரு.V.ஜெயக்குமார் M.A.M.Phil.,B.Ed., முதன்மைக்கல்வி அலுவலர் , திருவண்ணாமலை மாவட்டம். அவர்கள் தலைமையுரையாற்றினார். WCSC விரிவாக்க இயக்குனரகம்- இயக்குனர்  மு.பேரா.உழவன் மா.தங்கவேலு அவர்கள்  சிறப்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், ஆழியாறு இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட நிறைவுரையாற்றினார். திருவண்ணாமலை மண்டலத்தின் பொருளாளர் அருள்நிதி. S.ரவிச்சந்திரன் அவா்கள் நன்றியுரையாற்றினார். இறுதியாக ஒளி, ஒலி படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.