I would like to support Village Service Project

VSP at THIRUVATHAVUR Village

Started on December 17, 2016 Sponsored by WCSC, Located in Madurai zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா் - திருவாதவூர்
மாவட்டம் - மதுரை
கிராமத்தின் மக்கள் தொகை - 607

 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின்  72 வது கிராமமாக   மதுரை  மாவட்டம்,  திருவாதவூர்  கிராமத்தில் 17.12.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில்  மதுரை மண்டலப் பொருளாளர் பேரா.V.A.விமலா கங்காதரன் அவர்கள் தவம் நடத்தினாா். மதுரை, K.புதூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி. சேது. பாலன்  அவா்கள் வரவேற்புரையாற்றினார்.  WCSC விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் கிராமிய சேவை திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறினாா். மதுரை மண்டலத்தின் தலைவா். து.பேரா.N.வாசுதேவன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். மதுரை மண்டலத்தின் துணைத் தலைவா்.(VSP) து.பேரா.G.திருமேனிநாதன் அவர்கள்,  மதுரை K.புதூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணைத் தலைவர்.(VSP) து.பேரா.அருள்நிதி. S.பவானி ஈஸ்வரி அவர்கள் மற்றும் மதுரை மண்டலத்தின் துணைத் தலைவா்.(PRO) து.பேரா.E.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.கொ. வீரராகவராவ்  ..., அவா்கள் தலைமையுரையாற்றினார். மதுரை அறிவுத்திருக் கோயில் மனவளக் கலை மன்றத் தலைவர் முதுநிலைப் பேரா. RMJ.இராமநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC மதுரை மண்டலத்தின் செயலாளர்.து.பேரா.K.S.சுரேந்திரன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார்.
    தேனி அரசு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் Dr.கண்ணன்  போஜராஜன் M.D., அவர்கள், அருள்நிதி.சுசீலா மூர்த்தி M.A.,M.Phil.,M.A.(Yoga) ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம்கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   70 வது கிராமமாக மதுரை   மாவட்டம்  திருவாதவூர் கிராமத்தில் 14.06.2017 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவில்   பேரா.V.A.விமலா  அவர்கள் இறைவணக்கம், குருவணக்கமும் து.பேரா.மாரியம்மாள் அவர்கள்   தவத்தையும் நடத்தி துவக்கி வைத்தார்கள்.  மதுரை K.புதூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி. சேது. பாலன்  அவா்கள் வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். மதுரை மண்டலத்தின் தலைவா். து.பேரா.N.வாசுதேவன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். மதுரை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத்  தலைவர் முதுநிலைப் பேரா. RMJ.இராமநாதன் அவர்கள், திருவாதவூா் ஒன்றியத் தலைவா்  திருமதி.சசிகலா மோகன் அவர்கள்,  திருவாதவூா் லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  தாளாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள், மதுரை மண்டலத்தின் துணைத் தலைவா்.(VSP) து.பேரா.G.திருமேனிநாதன் அவர்கள் மற்றும்   மதுரை K.புதூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணைத் தலைவர்.(VSP) து.பேரா.அருள்நிதி. S.பவானி ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனா். திண்டுக்கல்  மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் திருமதி.G.லதா M.A., அவர்கள் தலைமையுரையாற்றினார். விவாக்க இயக்குனரகம்- இயக்குனர்  மு.பேரா.உழவன் மா.தங்கவேலு அவர்கள்  சிறப்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனரகம்- இயக்குனர்-செயலர் அருள்நிதி.P.முருகானந்தம் அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். WCSC மதுரை மண்டலத்தின் செயலாளர்.து.பேரா.K.S.சுரேந்திரன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். இறுதியாக ஒளி,ஒலி படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.