I would like to support Village Service Project
VSP at THIRUPPARAYATHURAI Village
Started on December 2, 2016 Sponsored by WCSC, Located in Trichy zone, Dividion in WCSC Villages
கிராமத்தின் பெயா் - திருப்பராய்த்துரை மாவட்டம் - திருச்சி கிராம மக்கள் தொகை - 1034 பயிற்சியால் பலனடைந்தவா்கள் -
துவக்க விழா
உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 71 வது கிராமமாக திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துரை கிராமத்தில் 24.11.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி மண்டலத்தின் அறக்கட்டளைத் தலைவா் அருள்நிதி.R.S.ஜம்புலிங்கம் அவா்கள் வரவேற்புரையாற்றினார். . WCSC விரிவாக்க இயக்குனா்–செயலா் அருள்நிதி.V.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். திருச்சி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.மாலா ஜெயப்பிராகாஷ் முன்னிலையுரையாற்றினார். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி இ.ஆ.ப., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திருச்சி மண்டலத்தின் செயலாளா் அருள்நிதி.S.காளிதாசன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவு விழா