I would like to support Village Service Project

VSP at ZAMIN MUTHUR Village

Started on August 7, 2016 Sponsored by WCSC, Located in Coimbatore zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா் - ஜமீன் முத்தூா்

 மாவட்டம் - கோவை 
கிராம மக்கள் தொகை - 1350

 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் - 274

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 67 வது கிராமமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஜமீன் முத்தூா் கிராமத்தில் 07.08.2016 அன்று கிராமிய சேவைத் திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC கோவை மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.R.பச்சையப்பன் அவா்கள் வரவேற்புரையாற்றினாா். உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவா் அருள்நிதி.M.சின்னச்சாமி அவா்கள், ஜமீன்முத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் திருமதி.V.பழனாள் அவா்கள், ஜமீன்முத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் திரு.ஜெகன் (எ) N.ஜெகதீஸ்வரன் B.com., அவா்கள், பொள்ளாச்சி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் திரு.K.குமரகுரு அவா்கள், பொள்ளாச்சி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைச் செயலாளா் M.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விரிவாக்க இயக்குனா்-செயலா் அருள்நிதி.V.P.முருகானந்தம் அவா்கள் நன்றியுரை வழங்கினார். ஆழியாா் அறிவுத்திருக் கோயில் அறங்காவலா்கள், உலக சமுதாய சேவா சங்கத்தின் நிா்வாக இயக்குனா்கள், முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து 6 மாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான அருள்நிதியர் பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

நிறைவு விழா

உலக சமுதாய சேவாசங்கம் கிராமிய   சேவைத்திட்டத்தின் 64வது   கிராமமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஜமீன் முத்தூா் கிராமத்தில் 29.01.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது
இவ்விழாவில் பொள்ளாச்சி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் திரு.K.குமரகுரு அவா்கள் வரவேற்புரையாற்றினார்.  பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.  WCSC கோவை மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.R.பச்சையப்பன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார்.ஆழியாறு அறிவு திருக்கோயில் அறங்காவலர்  அருள்நிதி.M.ரத்தினசாமி அவர்கள், ஆழியாறு அறிவு திருக்கோயில் அறங்காவலர் S.A.S.தர்மலிங்கம் அவர்கள், பொள்ளாச்சி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணைத்  தலைவா்(VSP) திருமதி. சுமதி முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகசமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவர் அருள்நிதி.M.சின்னசாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். உலகசமுதாய சேவா சங்கத்தின் விரிவாக்க இயக்குனர் முதுநிலை பேரா. உழவன் மா.தங்கவேலு அவர்கள் சிறப்புரையாற்றினார். WCSCவிரிவாக்கஇயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட நிறைவுரையாற்றினார்.
விழாவின் இறுதியாக வேதாத்திரிய கீதங்கள் ஒளி,ஒளி படக்காட்சிக்கு பின்பு பொள்ளாச்சி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் திரு.M.சண்முகசுந்தரம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.