I would like to support Village Service Project

VSP at PERIYAKATUPALAYAM Village

Started on July 18, 2016 Sponsored by WCSC, Located in Vizhupuram zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    - பெரியகாட்டுப்பாளையம்
மாவட்டம்                              -   கடலூர்                     
கிராம மக்கள் தொகை                -  525
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  428

துவக்க விழா

மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம்  மண்டலம்,  கடலூா் மாவட்டம், பெரியகாட்டுப்பாளையம் கிராம மக்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை வழங்கும் பொருட்டு, மிகுந்த பொருட் செலவில் சிமெண்ட் ஹாலோ பிளாக் (தக்கை கல்)  தொழிற்சாலை உலக சமுதாய சேவா சங்கத்தால் உருவாக்கப்பட்டு   கிராம மக்களுக்கு அா்பணிக்கப்பட்டுள்ளது. மேலும்  அவா்களின் வாழ்கை தரத்தை உயா்த்தும் பொருட்டு  உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   66 வது கிராமமாக பெரியகாட்டுப்பாளையம் கிராமம் தோ்வு செய்யப்பட்டு 18.07.2016 அன்று சிமெண்ட் ஹாலோ பிளாக் உற்பத்தி மையம் திறப்பு விழா மற்றும் கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழாவும்  நடைபெற்றது.
 இவ்விழாவின் துவக்கமாக உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ.  அருள்நிதி.SKM.. மயிலானந்தன்  அவா்கள் சிமெண்ட் ஹாலோ பிளாக் உற்பத்தி மையத்தை துவக்கி வைத்தார். தொடா்ந்து WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC இயக்குனா்-செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். கடலூா் மாவட்டம்  தமிழ்நாடு மகளீா் மேம்பாட்டு நிறுவனத்தின் இணை இயக்குனா்-திட்ட இயக்குனா் திருமதி.பூ.காஞ்சனா B.Sc.,B.Ed.,அவா்கள் முன்னிலையுரையாற்ற தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற் பொறியாளா்,இயக்குதலும் பராமரிப்பும், திருமதி.Er.L.லீனா B.E.,(Horns),M.B.A.,அவா்கள் மற்றும் பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் (பஞ்சாயத்து தலைவா்) திரு.R.ராமகிருஷ்ணன் ஆகியோர்   முன்னிலை வகித்தனா். கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குனா்-திட்ட இயக்குனா் திரு.ச.சா.குமார் B.Com.,B.L., அவா்கள் தலைமையுரையாற்ற உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ.  அருள்நிதி.SKM.. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விழுப்புரம் மண்டலத்தின்  செயலாளா் பேரா.K.P.உதயகுமாரன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
       இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

 

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 65 வது கிராமமாக கடலூா் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம்  கிராமத்தில் 20.03.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் துவக்கமாக பண்ருட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் அருள்நிதி.S.விஜயரங்கன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் மக்கள் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.R. ராமகிருஷ்ணன் அவர்கள், WCSC விழுப்புரம் மண்டலம் (VSP) துணைத் தலைவர் பேரா.S. உதயகுமார் மற்றும் பண்ருட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா்(VSP)  அருள்நிதி.P.லலிதா ஆகியோர் முன்னிலைவகித்தனர். பண்ருட்டி   லட்சுமி ரங்கா எண்டர்பிரைசஸ் அருள்நிதி.Dr.V.அபிராமி விஜயரங்கன் M.A.(Yoga).,Ph.D.(Phy)., அவர்கள் தலைமையுரையாற்றினார். விவாக்க இயக்குனகரம்இயக்குனர்  மு.பேரா.உழவன் மா. தங்கவேலு அவர்கள்  சிறப்புரையாற்றினார். விவாக்க இயக்குனகரம்இயக்குனர்செயலர் அருள்நிதி.P. முருகானந்தம் அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். விழுப்புரம் மண்டலத்தின் செயலாளர் அருள்நிதி.S.பார்த்திபன் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஒளி,ஒலி படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.