I would like to support Village Service Project

VSP at SENGUNAM Village

Started on May 29, 2016 Sponsored by WCSC, Located in Uncategorized zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் : செங்குணம் 

 மாவட்டம்         : திருச்சி
செங்குணம் கிராமத்தின் மக்கள் தொகை :  1600 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : பேர்கள் 

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 62 வது கிராமமாக திருச்சி  மாவட்டம் செங்குணம்  கிராமத்தில் 29.05.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC திருச்சி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.மாலா ஜெயப்பிராகாஷ் அவா்கள் வரவேற்புரையாற்றினார். செங்குணம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் திரு.ப.தனராசு அவா்கள் மற்றும் கிராமத்தைத் தத்தெடுக்க நிதி வழங்கிய துபாய் கா்மயோக காப்பாளா் அருள்நிதி மு.முருகராஜ் ஆகியோர்  முன்னிலையுரையாற்ற திருச்சி மாவட்ட வருவாய்துறை அலுவலா் செல்வி.ச.மீனாட்சி அவா்கள் தலைமையுரையாற்றினார். ஊா் பெரியவா்கள் மற்றும் வார்டு கவுன்சிலா்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திருச்சி  மண்டலத்தின் செயலாளா் அருள்நிதி.S.காளிதாசன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
       இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 60 வது கிராமமாக திருச்சி  மாவட்டம் செங்குணம்  கிராமத்தில் 25.11.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் துவக்கமாக WCSC திருச்சி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.மாலா ஜெயப்பிராகாஷ் அவா்கள் வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் மக்கள் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். பெரம்பலுர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி.சௌ.சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். பெரம்பலுர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் செல்வி. இரா.பேபி அவர்கள் தலைமையுரையாற்றினார். விவாக்க இயக்குனகரம், இயக்குனர்-செயலர் அருள்நிதி.P. முருகானந்தம் அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். விவாக்க இயக்குனகரம்- இயக்குனர்  மு.பேரா.உழவன் மா. தங்கவேலு அவர்கள்  சிறப்புரையாற்றினார். திருச்சி மண்டலம் VSP துணைத் தலைவர் அருள்நிதி.Dr.புவனேஸ்வரி அவர்கள் நன்றியுரையாற்றினார். உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

கிராம மக்களின் கருத்து