I would like to support Village Service Project

VSP at GANGAIMOTUR Village

Started on February 14, 2016 Sponsored by WCSC, Located in Chennai Sub-Urban zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் : கங்கைமோட்டூா் 
 மாவட்டம்         : வேலூா்
கங்கைமோட்டூா் கிராமத்தின் மக்கள் தொகை : 513 பேர்கள்
  பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்            :224 

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   59 வது கிராமமாக சென்னை புறநகா்  மண்டலம் வேலூா் மாவட்டம் கங்கைமோட்டூா் கிராமத்தில் 14.02.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின் தலைவா் சோ.மயில்முருகன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா் – செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் முன்னிலையுரையாற்ற கூடலூா் ஊராட்சி மன்றத் தலைவா் திருமதி.R.பாரதிராமன் அவா்கள் மற்றும் கூடலூா் ஊராட்சி மன்ற உறுப்பினா் திரு.S.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.  ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் தி.P.முருகேசன் B.Sc., அவா்கள் தலைமையுரையாற்ற வேலூா் மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (கணக்கு) திரு.S.பாஸ்கரன் B.Sc., அவா்கள் மற்றும்  அரக்கோணம் ஜோதி நகா் மனவளக்கலை  மன்ற அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலா் அருள்நிதி.Rtn.P.இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ.  அருள்நிதி.SKM.. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலம், துணைத்தலைவா் பேரா.B.K.கண்ணப்பன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
       இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

 உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   56 வது கிராமமாக சென்னை புறநகா்  மண்டலம் வேலூா் மாவட்டம் கங்கைமோட்டூா் கிராமத்தில் 23.09.2016 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின் தலைவா் அ.நி.சோ.மயில்முருகன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். அரக்கோணம் வட்டாட்சியா் திரு. ஆ.குமாரவேல் M.A.,   அவா்கள் முன்னிலையுரையாற்ற கூடலூா் ஊராட்சி மன்றத் தலைவா் திருமதி.R.பாரதிராமன் அவா்கள், கூடலூா் ஊராட்சி மன்ற உறுப்பினா் திரு.S.கோபி அவா்கள் மற்றும் அரக்கோணம் ஜோதி நகா் மனவளக்கலை  மன்ற அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலா்( பொறுப்பு) அருள்நிதி.Rtn.P.இளங்கோ ஆகியோர்  முன்னிலை வகித்தனா். திருவள்ளுவா் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளா் திரு.V.ராமமூா்த்தி  B.Sc.,M.Ed.,M.Phil.,அவா்கள் தலைமையுரையாற்றினார். ஆழியார் விரிவாக்க இயக்குனா் – செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டல செயலாளா் துணைப்பேராசிரியா்.K.சம்பத்குமார் அவா்கள் நன்றியுரையாற்றினார்.
இறுதியாக வேதாத்திரிய இசைக் குழுவினரின்  இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக்கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து 8 மாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

 

கிராம மக்களின் கருத்து