I would like to support Village Service Project

VSP at AZHAGIYANATHAM Village

Started on February 13, 2016 Sponsored by WCSC, Located in Vizhupuram zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – அழகிய நத்தம் 
 மாவட்டம் - கடலூர்
அழகிய நத்தம் கிராமத்தின் மக்கள் தொகை : 1392 
 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 664

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 58 வது கிராமமாக  விழுப்புரம்  மண்டலம் கடலூா் மாவட்டம் அழகிய நத்தம் கிராமத்தில் 13.02.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
        இவ்விழாவில் WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவா்கள் வரவேற்புரையாற்றினார்.  அழகிய நத்தம் பஞ்சாயத்து தலைவர் திருமதி.M.இராஜேஸ்வரி முத்துக்குமாரசாமி அவா்கள், அழகிய நத்தம் துணைப் பஞ்சாயத்து தலைவர் திருமதி.S.சின்னப்பொண்ணு  மற்றும் கடலூா் ஒன்றியக் கவுன்சிலர் திரு.S.முருகேசன் ஆகியோர்   முன்னிலை வகித்தனா். ITVU, C.K. ல்விக் குழுமத்தின் நிறுவனர் திரு.C.K.அசோக்குமார் அவர்கள் தலைமையுரையாற்றினார். ஸ்ரீ கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.Dr.K.இராஜேந்திரன் M.S.,FCIS.,FAIS., அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார்.. உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விழுப்புரம்  மண்டலத்தின் செயலாளா் பேராசிரியர்.K.P.உதயகுமாரன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
       இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

.

நிறைவு விழா       

          உலக சமுதாய சேவா சங்கம்கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   58 வது கிராமமாக விழுப்புரம்  மண்டலம் கடலூா் மாவட்டம் அழகிய நத்தம் கிராமத்தில் 23.10.2016 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC விழுப்புரம் மண்டலத்தின் (VSP) துணைத்தலைவா், மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அருள்நிதி.N.S.பார்த்திபன் அவர்கள்  வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். பேரா.K.R.சண்முகம் இணை இயக்குனா், விரிவாக்கம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவா்கள் முன்னிலையுரையாற்ற, அழகிய நத்தம் பஞ்சாயத்து தலைவர் திருமதி.M.இராஜேஸ்வரி முத்துக்குமாரசாமி அவா்கள், அழகிய நத்தம் துணைப் பஞ்சாயத்து தலைவர் திருமதி.S.சின்னப்பொண்ணு,  கடலூா் ஒன்றியக் கவுன்சிலர் திரு.S.முருகேசன் மற்றும் மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் அருள்நிதி. N.திருமலைராஜ் ஆகியோர்   முன்னிலை வகித்தனா். கடலூர் மகாலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் அருள்நிதி. Ln.K.ரவி  அவா்கள் தலைமையுரையாற்றினார். இயக்குநர்,செயலர்-விரிவாக்கம் அருள்நிதி.P.முருகானந்தம்  அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் பொருளாளர் அருள்நிதி.U. முத்துராமலிங்கம் அவா்கள் நன்றியுரை வழங்கினார்.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

கிராம மக்களின் கருத்து