I would like to support Village Service Project

VSP at KOVIL KANDANKUDI Village

Started on January 31, 2016 Sponsored by WCSC, Located in Kumbakonam zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – கோவில் கந்தன்குடி
மாவட்டம் - திருவாரூர் 
 கந்தன்குடி கிராமத்தின் மக்கள் தொகை : 317 
 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        :276 நபா்கள் 276

 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 57 வது கிராமமாக  கும்பகோணம் மண்டலம் திருவாரூர் மாவட்டத்தில் மேனாங்குடி ஊராட்சி, கோவில் கந்தன்குடி கிராமத்தில் 31.01.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவினை மன்னார்குடி மேலவீதி மனவளக்கலை மன்றத்தின் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி. லதா மகேஸ்வரி காமராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.V.பெரியசாமி  அவா்கள் வரவேற்புரையாற்றினார்.  மேனாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.D.புகழேந்தி B.Sc., அவா்கள், கோவில் கந்தன்குடி நாட்டாண்மை திரு. N.கலியமூர்த்தி அவர்கள், கோவில் கந்தன்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.A.A.அன்பழகன்  மற்றும் கும்பகோணம் மண்டலத்தின் துணைத் தலைவா்(VSP) அருள்நிதி.S.முத்து ஆகியோர்   முன்னிலை வகித்தனா். திருவாரூர் மாவட்டத்தின் புதுவாழ்வு திட்ட மேளாலர் திருமதி. R.கலைவாணிM.B.A.,M.S.W., அவர்கள் தலைமையுரையாற்றினார். ஆழியாறு விஷன் கல்விப்பிரிவு பேராசிரியர்.V. இராமமூர்த்தி அவர்கள், திரு.N.கோவிந்தராஜன் அவர்கள் மற்றும் சென்னை திருமதி.கீதாலெட்சுமி கோவிந்தராஜன் அவர்கள் மற்றும் சென்னை திரு.G.கோகுலக்கிருஷ்ணன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள்.. உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் செயலாளா் அருள்நிதி.R.K.இராதாகிருஷ்ணன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம்கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   57 வது கிராமமாக கும்பகோணம் மண்டலம் திருவாரூர் மாவட்டத்தில் மேனாங்குடி ஊராட்சி, கோவில் கந்தன்குடி கிராமத்தில் 22.10.2016 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் காரைக்கால் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேரா.S.வேலு அவர்கள்  வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.V.பெரியசாமி  அவா்கள் முன்னிலையுரையாற்ற மேனாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.D.புகழேந்தி B.Sc., அவா்கள், கோவில் கந்தன்குடி தவமையத் தலைவர் திரு.M.கணபதி அவா்கள், சென்னை திரு.N.கோவிந்தராஜன் அவர்கள், கும்பகோணம் மண்டலத்தின் துணைத் தலைவா்(VSP) அருள்நிதி.S.முத்து மற்றும் காரைக்கால் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை-துணைத் தலைவர் து.பேரா.A.கோதண்டராமன் ஆகியோர்   முன்னிலை வகித்தனா். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் திரு.கோ.ஆறுமுகம் அவா்கள் தலைமையுரையாற்றினார். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) திருமதி.கோ.பொற்செல்வி அவர்கள் மற்றும் திட்ட நன்கொடையாளர் – சென்னை திருமதி.கீதாலெட்சுமி கோவிந்தராஜன் அவர்கள் இயக்குநர், செயலர்-விரிவாக்கம் அருள்நிதி.P.முருகானந்தம்  அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். WCSC கும்பகோணம் மண்டலத்தின் செயலாளர் அருள்நிதி.R.K.இராதகிருஷ்ணன் அவா்கள் நன்றியுரை வழங்கினார்.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

கிராம மக்களின் கருத்து