I would like to support Village Service Project

VSP at SENGODAMPALAYAM Village

Started on January 3, 2016 Sponsored by WCSC, Located in Tirupur zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்             -  செங்கோடம்பாளையம்
மாவட்டம்                      -  திருப்பூா்
கிராம மக்கள் தொகை            -
 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்    -   

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   56 வது கிராமமாகவும் திருப்பூா் மண்டலத்தின் 7 வது கிராமமாகவும் செங்கோடம்பாளையம் கிராமத்தில் 03.01.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவின் துவக்கமாக பேரா. சு. ருக்மணி  குப்புசாமி அவா்கள் இறைவணக்கம் குருவணக்கம் பாடினார்கள். காங்கேயம்  மனவளக்கலைமன்ற  அறக்கட்டளைத் தலைவர்   அருள்நிதி. K.பழனிச்சாமி அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC திருப்பூா் மண்டலத்தின் தலைவா் .நி.SKY.V.சுந்தரராஜ் அவர்கள் தலைமையுரையாற்றினார்.  காங்கேயம் MPM டெக்ஸ்டைல்ஸ் உயர்திரு.M.பாலுமணி அவர்கள், திருப்பூா் DMR டெக்ஸ்டைல்ஸ் உயர்திரு.S. தெய்வசிகாமணி  அவர்கள், ஆழியார்அறிவுத்திருக் கோயில் அறங்காவலர், காங்கேயம் அனுக்கிரகா பேஷன் மில்ஸ் அருட்செல்வர்.P.மோகன்  ஆகியோர் முன்னிலை வகித்தனா். திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் .நி.V.M.கந்தசாமி  வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். காங்கேயம்  மனவளக்கலைமன்ற  அறக்கட்டளைச் செயலாளர் பேரா. V.P.கொங்குராஜ் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   59 வது கிராமமாகவும் திருப்பூா் மண்டலத்தின் 7 வது கிராமமாகவும் செங்கோடம்பாளையம் கிராமத்தில் 16.11.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் நிறைவு விழா நடைபெற்றது.
விழாவின்  துவக்கமாக இறைவணக்கம் குருவணக்கம் தவத்தை தொடர்ந்து  காங்கேயம்  மனவளக்கலைமன்ற  அறக்கட்டளைச் செயலாளர் பேரா. V.P.கொங்குராஜ் அவா்கள் வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். விரிவாக்க இயக்குனரகம்இயக்குனா் மு.பேரா. உழவன் மா.தங்கவேலு அவர்கள் தலைமையுரையாற்றினார். காங்கேயம்  மனவளக்கலைமன்ற  அறக்கட்டளையின் கௌரவத் தலைவர்   அருள்நிதி. K.பழனிச்சாமி அவா்கள், திருப்பூா்    மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர்  .நி.V.M.கந்தசாமி  அவா்கள், ஊதியூர் அறிவுத்திருக்கோயில் நிலம் நன்கொடையாளார் அருள்நிதி. சுப்பையகவுண்டர் அவர்கள், காங்கேயம் MPM டெக்ஸ்டைல்ஸ் உயர்திரு.M.பாலுமணி அவர்கள் மற்றும் திருப்பூா் DMR டெக்ஸ்டைல்ஸ் உயர்திரு.S. தெய்வசிகாமணி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்விரிவாக்க இயக்குனரகம்இயக்குனர்செயலர். அருள்நிதி. P.முருகானந்தம் அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். இறுதியாக திருப்பூா் மண்டல  துணைத் தலைவா்  அருள்நிதி.T.M.P.காளியப்பன் அவர்களின் நன்றியுரைக்கு பின்னர்  உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

கிராம மக்களின் கருத்து