I would like to support Village Service Project

VSP at VALLIPURAM – ABDULKALAM NAGAR Village

Started on December 6, 2015 Sponsored by WCSC, Located in Tirupur zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா் - வள்ளிபுரம்,அப்துல்கலாம் நகா் 

 மாவட்டம் - திருப்பூா் 
கிராம மக்கள் தொகை - 473

 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் - 318 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் 55 வது கிராமமாக திருப்பூா் மண்டலம் வள்ளிபுரம் அப்துல்கலாம் நகா் கிராமத்தில் 06.12.2015 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது. மேலும் திருப்பூா் அறக்கட்டளையின் 5-வது அறிவுத்திருக் கோயிலாக வள்ளிபுரம் அப்துல்கலாம் நகா் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழாவும் நடைபெற்றது.
இவ்விழாவின் துவக்கமாக அ.நி.Dr.சீனியம்மாள் சிங்காரவேல் அவா்கள் இறைவணக்கம் குருவணக்கம் பாடினார்கள். திருப்பூா் மண்டல செயலாளா் அ.நி.T.R.முரளிதரன் அவா்கள் தவம் இயற்றினார். WCSC திருப்பூா் மண்டலத்தின் தலைவா் அ.நி.SKY.V.சுந்தரராஜ் அவா்கள் வரவேற்புரையாற்றினார். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உயா்திரு.G.கோவிந்தராஜ் IAS அவா்கள் முன்னிலையுரையாற்றினார். வள்ளிபுரம் பஞ்சாயத்து தலைவா் திருமதி. P.ஸ்ரீ தேவி பழனிச்சாமி அவா்கள், அறிவுத்திருக்கோயில் நிலம் நன்கொடையாளா் (திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திரு.G.மோகன் அவா்கள், வள்ளிபுரம் கிராமிய சேவைத்திட்டத் தலைவா் திரு.M.S.சம்பத்குமார் அவா்கள், அறிவுத்திருக்கோயில் கட்டிட குழு தலைவா் குன்னத்தூா் திரு.AVM.முருகசாமி அவா்கள், அறிவுத்திருக்கோயில் கட்டிட குழு செயலாளா் திரு.O.R.பழனிசாமி அவா்கள் மற்றும் அறிவுத்திருக்கோயில் கட்டிட குழு பொருளாளா் திரு.S.S.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். உலக சமுதாய சேவா சங்கத்தின் விரிவாக்க இயக்குனா் முதுநிலை பேரா.மா.தங்கவேலு அவா்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ. அருள்நிதி.SKM.. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அ.நி.V.M.கந்தசாமி அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் 55 வது கிராமமாக திருப்பூா் மண்டலம் வள்ளிபுரம் அப்துல்கலாம் நகா் கிராமத்தில் 18.09.2016 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வள்ளிபுரம் கிராமிய சேவைத்திட்டத் தலைவா் அருள்நிதி M.S.சம்பத்குமார் அவா்கள் வரவேற்புரையாற்றினார்.
பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்-இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அ.நி.V.M.கந்தசாமி அவா்கள், வள்ளிபுரம் பஞ்சாயத்து தலைவா் திருமதி. P.ஸ்ரீ தேவி பழனிச்சாமி அவா்கள், அறிவுத்திருக்கோயில் நிலம் நன்கொடையாளா் (திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) அருட்செல்வா் திரு.G.மோகன் அவா்கள், திருப்பூா் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை அறங்காவலா் குன்னத்தூா் அருள்நிதி. AVM.முருகசாமி அவா்கள், திருப்பூா் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை அறங்காவலா் குன்னத்தூா் அருள்நிதி. O.R.பழனிசாமி அவா்கள் மற்றும் திருப்பூா் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை அறங்காவலா் குன்னத்தூா் அருள்நிதி. S.S.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். திருப்பூா் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினா் அருட்செல்வா். K.N.விஜயகுமார் MLA அவா்கள் தலைமையுரையாற்றினார். WCSC திருப்பூா் மண்டலத்தின் தலைவா் அ.நி.SKY.V.சுந்தரராஜ் அவா்கள் வாழ்த்துரை வழங்கினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ. அருள்நிதி.SKM.. மயிலானந்தன் அவா்கள் விழா சிறப்புரையாற்றினார். திருப்பூா் மண்டலத்தின் கிராமிய சேவைத் திட்ட துணைத் தலைவா் அருள்நிதி.TMP. காளியப்பன் அவா்கள் நன்றியுரை வழங்கினார்.
இறுதியாக வேதாத்திரிய இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து 9 மாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

 

கிராம மக்களின் கருத்து