I would like to support Village Service Project

VSP at ALIYAR NAGAR Village

Started on December 15, 2014 Sponsored by WCSC, Located in Coimbatore zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – ஆழியாா் நகா்

மாவட்டம் - கோயமுத்தூா்
கிராமத்தின் மக்கள் தொகை : 1050 பேர்கள்

பயிற்சியால் பயனடைந்தவர்கள்  : 878 பேர்கள்

துவக்க விழா

 

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 40 வது கிராமமாக கோவை மாவட்டம்  ஆழியார் நகா் கிராமத்தில் 15.12.2014 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.

 

 

இவ்விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவர் அருள்நிதி.ஆ.சின்னசாமி அவர்கள் வரவேற்புரையாற்ற கோட்டூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. பூங்கோதை துரைசாமி அவர்கள் மற்றும் ஆழியார் 13வது வார்டு உறுப்பினர் திரு. சமுத்திரபாண்டியன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். Aliyar PWD-Sub Division Officer திரு.அ.கருணாகரன்,DCRE அவர்கள் தலைமையுரையாற்ற, Aliyar Sub Inspector of police திருமதி.பு.அம்சவேணி M.A. அவர்கள், ஆழியார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ. அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். உலக சமுதாய சேவாசங்கத்தின் கோவை மண்டலத் தலைவர் அருள்நிதி. R.பச்சையப்பன் அவர்கள் நன்றியுரையாற்றினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா். இறுதியில் திருச்சி அருமைக்கலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டதைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிறைவு விழா

 

உலக சமுதாய சேவா சங்கத்தின் 54 வது கிராமமாக ஆழியார் நகர் கிராமிய சேவைத் திட்ட நிறைவு விழா
16.06..2016 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவைமண்டலத் தலைவர் அருள்நிதி.R.பச்சையப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்துகாண்பித்தனர்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் விரிவாக்க இயக்குநர்,செயலர்.அருள்நிதி.P.முருகானந்தம்,CEO அவர்கள் கிராமத்தின் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.
உலக சமுதாய  சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ. அருள்நிதி. SKM. மயிலானந்தன் அவர்கள் கிராமிய சேவைத்திட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
உலக சமுதாய சேவா சங்கத்துணைத் தலைவர் அருள்நிதி. சின்னசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியாக வேதாத்திரிய இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

கிராம மக்களின் கருத்து

 

[youtube http://www.youtube.com/watch?v=93KOtTkDbg4]