I would like to support Village Service Project

VSP at Aliyar Puliyankandi Village

Started on May 25, 2014 Sponsored by WCSC, Located in Coimbatore zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – ஆழியார் – புளியங்கண்டி
மாவட்டம் – கோவை

கிராமத்தின் மக்கள் தொகை : 424 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 126 பேர்கள்

துவக்க விழா

25.05.2014 உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 33-வது கிராமமாக ஆழியார் அறிவுத்திருக்கோயிலுக்கு அருகிலுள்ள ஆழியார்-புளிங்கண்டி கிராமத்தில் கிராமிய சேவைத் திட்ட துவக்க விழா நடைபெற்றது.

இதில் ஆழியார் அறிவுத்திருக்கோயில் அறங்காவலர்கள், உலக சமுதாய சேவா சங்க முக்கிய பிரமுகர்கள், பேராசிரியர்கள், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். மேலும் மனவளக்கலை பயிற்சி முறைகளை விளக்கும் வகையில் திருச்சி, அருமை கலைக் காரியாலயம் குழுவினரின் கலைநிகழ்ச்சியும், அண்ணன்மார் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிறைவு விழா

25.05.2014 அன்று புளியங்கண்டி கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.